சூர்யா ப‌திவுக‌ள்

‘ம‌லேசியா வாசுதேவ‌ன்’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

நினைவில் நின்ற‌ த‌மிழ் பாட‌க‌ர்க‌ளும் பாட‌ல்க‌ளும்

பதிந்தவர் சூர்யா மேல் ஜனவரி 3, 2009

ம‌லேசியா வாசுதேவ‌ன்

த‌மிழ் திரைப்ப‌ட‌ பாட‌க‌ர்க‌ளில் ம‌றக்க‌ முடியாத‌வ‌ர்க‌ளில் ப‌ட்டிய‌லில் இவ‌ரும் ஒருவ‌ர் என்றால் அது மிகையாகாது. இவ‌ர் பாடிய‌ ப‌ல‌ பாட‌ல்க‌ளை இன்று கேட்டாலும் அவை ம‌ல‌ரும் நினைவுக‌ள் போல் தான் தோன்றும். குறிப்பாக‌ இவ‌ர் இளைய‌ராஜாவின் இசையில் பாடிய‌ அனைத்து பாட‌ல்க‌ளுமே சூப்பர் ஹிட் பாட‌ல்களாக‌ அமைந்த‌தை யாராலும் ம‌றக்க‌ முடியாது.

அவ‌ர் பாடிய‌ பாட‌ல்க‌ளில் இன்றும் கேட்க‌ கேட்க‌ தூண்டும் பாட‌ல்க‌ள் ஏராள‌ம் என்றாலும் இங்கே சில‌ பாட‌ல்க‌ளைக் குறிப்பிட‌ விரும்புகிறேன்.

ஆகாய‌ க‌ங்கை பூந்தேன் ம‌ல‌ர் சூடி – த‌ர்ம‌யுத்த‌ம் (1979)
இந்த‌ மின்மினிக்கு க‌ண்ணில் ஒரு – சிக‌ப்பு ரோஜாக்க‌ள் (1978)
கோவில் ம‌ணி ஓசை த‌ன்னை – கிழ‌க்கே போகும் ர‌யில் (1978)
ஆயிர‌ம் ம‌ல‌ர்க‌ளே ம‌ல‌ருங்க‌ள் – நிற‌ம் மாறாத‌ பூக்க‌ள் (1979)
நீங்காத‌ எண்ண‌ம் ஒன்று நெஞ்சோடு நின்று – விடியும் வ‌ரை காத்திரு (1981)
கோடை கால‌ காற்றே – ப‌ன்னீர் புஷ்ப‌ங்க‌ள் (1981)
ஒரு த‌ங்க‌ ர‌த‌த்தில் – த‌ர்ம‌யுத்த‌ம் (1979)
வான் மேக‌ங்க‌ளே வாழ்த்துங்க‌ள் – புதிய‌ வார்ப்புக‌ள் (1979)
பூங்காற்று திரும்புமா – முத‌ல் ம‌ரியாதை (1985)
வெட்டி வேரு வாச‌ம் – முத‌ல் ம‌ரியாதை (1985)
வெள்ளை ம‌ன‌ம் உள்ள‌ ம‌ச்சான் – சின்ன‌ வீடு (1985)

ர‌ஜினிகாந்தின் ப‌ட‌த்தில் இவ‌ர் பாடிய‌ ஏராள‌மான‌ பாட்டுக்க‌ள் மற‌க்க‌ முடியாத‌வை ம‌ட்டும‌ல்லாம‌ல் இன்றும் எல்லா ஊர் திருவிழாக்க‌ளிலும் இவ‌ருடைய‌ பாட‌ல்க‌ள் இன்னும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிற‌து.

இன்றும் திருவிழாக்க‌ளில் முத‌ல் பாட‌ல் ம‌லேசியா வாசுதேவ‌ன் பாடிய‌ “பொதுவாக‌ என் ம‌ன‌சு த‌ங்க‌ம்” தான் முத‌லிட‌ம்.

ம‌னோ

M. S. விஸ்வ‌நாத‌னின் க‌ண்டுபிடிப்பான‌ இவ‌ர் இளைய‌ராஜாவின் இசையில் 1980 ‍ன் இறுதியிலிருந்து 1990 ‍ன் இறுதி வ‌ரை ப‌ல‌ ஹிட் பாட‌ல்க‌ளைப் பாடிய‌ பெருமை இவ‌ருக்குண்டு. குறிப்பாக‌ ம‌னோ ம‌ற்றும் சித்ரா கூட்ட‌ணியில் வ‌ந்த‌ பாட‌ல்க‌ள் ஏராள‌ம்.  இவ‌ர் பாடிய‌ பாட‌ல்க‌ளில் என‌க்குப் பிடித்த‌ சில‌ பாட‌ல்க‌ள்:

செண்ப‌க‌மே செண்ப‌க‌மே – எங்க‌ ஊரு பாட்டுக்கார‌ன் (1987)
ஓ பாப்பா லாலி கண்ம‌ணி லாலி – இத‌ய‌த்தை திருடாதே (1989)
ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா – இத‌ய‌த்தை திருடாதே (1989)
ஓம் ந‌ம‌ஹா உருகும் உயிருக்கு – இத‌ய‌த்தை திருடாதே (1989)
காவிய‌ம் பாட‌வா தென்ற‌லே – இத‌ய‌த்தை திருடாதே (1989)
நிலா காயும் நேர‌ம் ச‌ர‌ண‌ம் – செம்ப‌ருத்தி (1992)
குட‌கு ம‌லை காற்றில் வ‌ரும் பாட்டு – க‌ர‌காட்ட‌க்கார‌ன் (1989)
வா வா வா வா க‌ண்ணா வா – வேலைக்காரன் (1987)
ம‌லையாள‌க் க‌ரையோர‌ம் – ராஜாதி ராஜா (1989)
ம‌லைக் கோவில் வாச‌லில் கார்த்திகை – வீரா (1994)

“செண்ப‌க‌மே செண்ப‌க‌மே” என்ற‌ பாடலின் மூல‌ம் புக‌ழ் பெற்ற‌வ‌ர், தொட‌ர்ந்து ப‌ல‌ சூப்ப‌ர் ஹிட் பாட‌ல்க‌ள் பாடும் வாய்ப்பு இவ‌ருக்கு கிடைத்த‌து. முத்து ம‌ற்றும் சிவாஜி ப‌ட‌ங்க‌ளுக்கு தெலுங்கில் ர‌ஜினிகாந்திற்கு பின்ன‌ணி குர‌ல் கொடுத்த‌வ‌ரும் இவ‌ரே.

தீப‌ன் ச‌க்க‌ர‌வ‌ர்த்தி

என்னிட‌ம் ப‌ல‌ ந‌ண்ப‌ர்க‌ள் இவ‌ர் பாடிய‌ பாட‌லை கேட்டு விட்டு, இந்த‌ப் பாட‌லைப் பாடிய‌து யார் என்று கேட்ட‌துண்டு. ப‌ல‌ சூப்ப்ர் ஹிட் பாட‌லைப் பாடிய‌ இவ‌ரை ப‌ல‌ருக்கு நினைவில்லாம‌ல் போயிருக்க‌லாம். த‌ற்போது இவ‌ர் ஒரு சில‌ திரைப்ப‌ட‌ங்க‌ளிலும் சீரிய‌ல்க‌ளிலும் ந‌டித்துக் கொண்டு இருக்கிறார்.

விஜ‌ய் டி.வி த‌ற்போது ந‌ட‌த்திக் கொண்டிருக்கும் “சூப்பர் சிங்க‌ர் 2008″ ‍ல் இவ‌ரைப் பார்த்த‌தும் இவ‌ர் பாடிய‌ பாட‌ல்க‌ள் தான் என் ம‌ன‌தில் வ‌ந்து நின்ற‌ன‌. அவ‌ர் பாடி என‌க்குப் பிடித்த‌ சில‌ பாட‌ல்க‌ள்:

செவ்வ‌ந்திப் பூக்க‌ளில் செய்த‌ வீடு  – மெல்ல‌ப் பேசுங்க‌ள் (1983)
பூங்க‌த‌வே தாழ்திற‌வாய் – நிழ‌ல்க‌ள் (1980)
அரும்பாகி மொட்டாகி – எங்க‌ ஊரு காவ‌ல்கார‌ன் (1988)
தேவ‌தை போல் ஒரு பெண்ணிங்கு  – கோபுர‌ வாச‌லிலே (1991)

இவ்வ‌ள‌வு நன்றாக‌ப் பாடும் திற‌மை ம‌ற்றும் இனிமையான‌ குர‌ல் வ‌ள‌ம் இவ‌ரிட‌ம் இருந்தும் ஒரு கால‌கட்ட‌த்தில் இருந்தே இவ‌ருக்கு ந‌ம‌து இசை அமைப்பாள‌ர்க‌ள் வாய்ப்பு அதிக‌ம் தராம‌ல் போன‌து ஏன் என்று தெரிய‌வில்லை.

இவ‌ர் புக‌ழ் பெற்ற‌ ப‌ழைய‌ பாட‌க‌ரான‌ திரு. திருச்சி லோக‌நாத‌னின் புத‌ல்வ‌ர் என்ப‌து குறிப்பிட‌த்தக்க‌து.

.... இங்கே பதியப்பட்டது சினிமா | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , | Leave a Comment »