சூர்யா ப‌திவுக‌ள்

‘பார‌த‌ம்’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

நாளைய கிழக்கு

பதிந்தவர் சூர்யா மேல் ஜனவரி 20, 2009

இன்றைய கிழக்கின்
இளைய பாரதத்தில்
எத்தனை அவலங்கள்
எத்தனை கொடுமைகள்

பஞ்சம் ஒரு பக்கம்
பசி ஒரு பக்கம்
தஞ்சம் புகுந்திட
தரணியில் இடமில்லை
     
சாராய சாம்ராஜ்யம்
சண்டாளர் கேளிக்கை
பாராளும் மன்னர்கள்
பதவிக்கு குடுமிப்பிடி

சடுகுடு விளையாடிய
சகோதர பூமியில்
வெடிகுண்டு கலாச்சாரம்
வீதியெங்கும் பிணக்குவியல்

கலாச்சாரம் பண்பாடு
போனதெங்கே எனத்தேடு
சாதி மதக் கலவரங்கள்
படுத்துதிங்கே பெரும்பாடு

எனவே,

சாதி மத பேதமில்லா
ந‌மதருமை பண்பாட்டோடு
இளைஞர் சமுதாயம் எழுச்சி பொங்க
புதிய பாரதம் படைத்திட

சத்தியம் ந‌மது புத்தகமாகட்டும்
சமத்துவம் ந‌மது தத்துவமாகட்டும்
நாளைய கிழக்காவது
ந‌லமாய் விடியட்டும்.

- மீனா மாத‌வ‌ன், ஈரோடு

.... இங்கே பதியப்பட்டது க‌விதை | குறிச்சொல்லிடப்பட்டது: , , | 2 மறுமொழிகள் »