சூர்யா ப‌திவுக‌ள்

‘ந‌ம்பியார்’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

நடிகர் நம்பியார் மறைவு

பதிந்தவர் சூர்யா மேல் நவம்பர் 30, 2008

தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களின் ஒருவரும் வில்லன் நடிப்பிற்கு பெயர்போன நடிகர் நம்பியார் அவர்கள் கடந்த நவம்பர் 19-ந் தேதி சென்னையில் காலமானார். இவரது உடலுக்கு கமல்ஹாசன், ரஜினிகாந்த் உட்பட அனைத்து திரையுலகினரும் அஞ்சலி செலுத்தினர்.

வில்லன் நடிகர் என்றால் முதல் அனைவரது ஞாபகத்திலும் வருபவர் நம்பியார் என்றால் மிகையாகாது. இவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உடன் நடித்து வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட், அதிலும் குறிப்பாக எங்க வீட்டு பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண், படகோட்டி படங்கள் அடங்கும். எம்.ஜி.ஆர் உடன் இவர் திரையில் வந்தாலே மக்களிடம் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும், அந்த அளவிற்கு இருவரிடத்திலும் நடிப்பில் ஒரு போட்டி இருக்கும். இவர்கள் இருவர் போடும் கத்தி சண்டையைப் பார்க்கவே பல தடவை ரசிகர்கள் திரும்ப திரும்ப பார்க்க வருவது மறக்க முடியாத ஒன்று.  ஒரு காலகட்டத்தில் இவரை நிஜ வில்லனாகவே மக்கள் நினைக்கும் அளவிற்கு தனது நடிப்பின் மூலம் பெயர் வாங்கியவர். இவர் தனது உருட்டும் கண்களாலும், ஒரு விதமாக கையை பிசைந்து வசனம் பேசி நடிக்கும் நடிப்பு ஒரு மிரட்டலாகவே இருந்தது.

அந்த காலத்திலேயே ஆங்கிலப் படத்தில் நடித்த பெருமை இவருக்கு உண்டு. அதுமட்டுமில்லாமல் இவர் அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் (எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த்….)  நடித்த பெருமையை பெற்றவர். இவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் அமைதியான சினிமா வில்லன் நடிப்பிற்கு சம்பந்தமில்லாத மற்றும் ஒரு தீவிர ஐயப்ப பக்தர். இவர் தமிழ் திரையுலகில் ஒழுக்கமான, கட்டுப்பாடான நடிகர்களுள் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

.... இங்கே பதியப்பட்டது செய்திகள் | குறிச்சொல்லிடப்பட்டது: , | Leave a Comment »