சூர்யா ப‌திவுக‌ள்

‘ஏர் டெக்கான்’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

தபால் நிலையங்களில் ஏர் டெக்கான் விமான டிக்கெட் வசதி

பதிந்தவர் சூர்யா மேல் April 10, 2008

தமிழக தபால் நிலையங்களில் ஏர் டெக்கான் விமான டிக்கெட்டுக்களை நாளை முதல் விற்பதற்கு ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்தில் இன்டெர்நெட் வசதியுள்ள தபால் நிலையங்களில் டெக்கான் நிருவனம் தனது விமான டிக்கெட்டுகளை விற்பனை செய்ய தபால் துறையுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல நகரங்களில் பொது மக்கள் இந்த வசதியைப் பெறமுடியும். இச்சேவைக்கு ஐந்து சதவிகிதம் சர்வீஸ் சார்ஜ் தபால்துறை பெற்றுக்கொள்ளும். விமான டிக்கெட்டுக்கள் தபால் நிலையங்களில் பெரும் வசதியை கொண்டு வந்தது வரவேற்க வேண்டிய விஷயம் என்பதில் சந்தேகமேயில்லை.

Added on Jun 09, 2008

ர‌யில், த‌னியார் ப‌ஸ் ம‌ற்றும் உள்நாட்டு விமான‌ங்க‌ளின் டிக்கெட்டுக‌ளும்…… 

ர‌யில் ம‌ற்றும் த‌னியார் ப‌ஸ் டிக்கெட்டுக‌ள் பெறும் வ‌ச‌தியும் த‌பால் நிலையங்களில் தொட‌ங்கியிருப்ப‌து க‌ண்டிப்பாக‌ இப்போதுள்ள‌ ர‌யில்வே முன்ப‌திவு நெரிச‌லை குறைக்கும், அதும‌ட்டுமில்லாம‌ல் இப்பொழுது உள்நாட்டு விமான‌ங்க‌ளின் (இந்திய‌ன் ஏர்லைன்ஸ், ஜெட் ஏர்வேஸ், கிங்பிஷ‌ர், பார‌மெள‌ண்ட், ஏர் டெக்கான், ஸ்பைஸ் ஜெட்) டிக்கெட்டுக‌ளும் கிடைக்க‌ ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து ந‌ல்ல‌ விஷ‌ய‌மே. ஏ.ஆர்.எம்.ஐ. சொல்யூசன் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்த‌ வ‌ச‌தி அறிமுக‌ப்ப‌டுத்துவ‌தாக‌வும், அர‌சு ப‌ஸ் டிக்கெட்டுக‌ளும், இன்ஸ்ட‌ன்ட் ம‌ணியார்ட‌ர் வ‌ச‌தியும் விரைவில் கிடைக்க‌ ஏற்பாடு செய்வ‌து என்றும் முடிவு எடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. அனைத்து த‌பால் நிலைய‌ங்களிலும் இந்த‌ வ‌ச‌தி விரைவில் அறிமுக‌ப்ப‌டுத்தினால் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் தான்…

.... இங்கே பதியப்பட்டது செய்திகள் | குறிச்சொல்லிடப்பட்டது: | Leave a Comment »