பதிந்தவர் சூர்யா மேல் ஜனவரி 20, 2009
இன்றைய கிழக்கின்
இளைய பாரதத்தில்
எத்தனை அவலங்கள்
எத்தனை கொடுமைகள்
பஞ்சம் ஒரு பக்கம்
பசி ஒரு பக்கம்
தஞ்சம் புகுந்திட
தரணியில் இடமில்லை
சாராய சாம்ராஜ்யம்
சண்டாளர் கேளிக்கை
பாராளும் மன்னர்கள்
பதவிக்கு குடுமிப்பிடி
சடுகுடு விளையாடிய
சகோதர பூமியில்
வெடிகுண்டு கலாச்சாரம்
வீதியெங்கும் பிணக்குவியல்
கலாச்சாரம் பண்பாடு
போனதெங்கே எனத்தேடு
சாதி மதக் கலவரங்கள்
படுத்துதிங்கே பெரும்பாடு
எனவே,
சாதி மத பேதமில்லா
நமதருமை பண்பாட்டோடு
இளைஞர் சமுதாயம் எழுச்சி பொங்க
புதிய பாரதம் படைத்திட
சத்தியம் நமது புத்தகமாகட்டும்
சமத்துவம் நமது தத்துவமாகட்டும்
நாளைய கிழக்காவது
நலமாய் விடியட்டும்.
- மீனா மாதவன், ஈரோடு
.... இங்கே பதியப்பட்டது கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: கிழக்கு, நாளைய கிழக்கு, பாரதம் | 2 மறுமொழிகள் »
பதிந்தவர் சூர்யா மேல் ஜனவரி 1, 2009
மாண்புடையோன் மாணவன்
எண்ணியாங்கு எய்திடுவன்
திண்ணியாங்கு செய்திடின்
பின்னணி உணர்ந்து நோக்கிடில்
முன்னணி விரைந்து சேர்ந்திடலாம்!
அக சிந்தை வேறு; புறச் சிந்தனை வேறு!
தகைமையாய் சிந்தித்தால் அகமும் புறமும் ஒன்றாகுமே!
ஞாலம் வென்றிடலாம்; தன்மையாய்
காலம் ஒன்றி கருத்தாய் கடமை செய்தால்
பருவத்தே பயிர் செய்திடலாம்; தீங்கின்றி பாங்காய்.
நன்றி: சு.கோடீஸ்வரன், துணை ஆட்சியர் (ஓய்வு), சிவகங்கை.
.... இங்கே பதியப்பட்டது கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: மாணவன் | 1 மறுமொழி »
பதிந்தவர் சூர்யா மேல் ஜனவரி 1, 2009
அனைவருக்கும் எமது முதற்கண் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
சிங்கப்பூரில் கவிமாலை இப்புத்தாண்டை முன்னிட்டு நடத்திய கவிதைப் போட்டியில் எனது நண்பரின் தகப்பனார் உயர்திரு சு.கோடீஸ்வரன், துணை ஆட்சியர் (ஓய்வு) அவர்கள் எழுதிய கவிதையை இங்கு எனது நன்றியுடன் இதோ..
மாதமோ மார்கழி கீதமோ குழலோசையே
ஏழிசையில் குழல் இன்னிசை ஆனதே
வண்டொரு மூங்கிலில் துளை இட்டது நோக்கினன்
கண்டொரு மூங்கிலை குடைந்து குழல் ஆக்கினன்
ஈரடி இட்டனன் ஏழ் துளை ஏழு சுர மறிய வைத்தனன்
எண் துளை குழலும் சேர்த்தனன்
எண் தொகை நூல் அறியவே
இதயத்துட் துளை இட்டனன்
எதையும் தாங்கும் இதயம் உதயமாகவே
மென்மையாய் மேன்மையாய் கவினுறு கலையுடன் குழல் வடித்தனன்
தொன்மையான போழ்திலே
முல்லைக் குழல் கொன்றைக் குழல்
ஆம்பல் குழல் ஊதினரே
மண்ணுலக நல்லோசை வாயசை விரலசை காற்றசைவால் குழலோசை ஆனதே
விலை மலிவாயினும் இன்னர் இளையர் எனுஞ் சொல்விடுத்து
கல்லோராயினும் கற்றோராயினும்
இசைப்பார் இசைத்தால் குழலோசை வாராதோ
குழலொடு ஒலி பாடல் குவலயத்தார் மனம் ஆடல் கண்ணன்
குழலிசை நாடல் கண்ணன் குழலோ பன்சூரி. பன்சூரி எனில் மூங்கிலோசை
மன்னுயிர் வருந்திடில் நின்னருள் வலத்தால் குழலிசைத்தால்
நன்னுமா வருத்தம் நீக்கிட வேணு கானம் தர வாராயோ கண்ணா..
ஆக்கம் – சு.கோடீஸ்வரன், துணை ஆட்சியர் (ஓய்வு), சிவகங்கை.
.... இங்கே பதியப்பட்டது கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: புல்லாங்குழல் | 1 மறுமொழி »