சூர்யா ப‌திவுக‌ள்

ஆஸ்க‌ர் விருதுக்காக‌ ஏ.ஆர்.ர‌ஹ்மான் பெய‌ர் 3 பிரிவுக‌ளில் ப‌ரிந்துரை

பதிந்தவர் சூர்யா மேல் ஜனவரி 24, 2009

த‌மிழ‌க‌த்தின் இசைப்புய‌ல் ஏ.ஆர்.ர‌ஹ்மான் அவ‌ர்க‌ளின் பெய‌ர் இந்த‌ ஆண்டு ’ஆஸ்க‌ர் விருது’க்கு 3 பிரிவுக‌ளில் ப‌ரிந்துரை செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. ஏ.ஆர்.ர‌ஹ்மான் இசைய‌மைத்த‌ “ஸ்ல‌ம்டாக் மில்லிய‌ன‌ர்” என்ற‌ திரைப்ப‌ட‌ம் சிற‌ந்த‌ இசைய‌மைப்பாள‌ர், சிற‌ந்த‌ இய‌க்குன‌ர் உள்ப‌ட‌ 10 ஆஸ்க‌ர் விருதுக‌ளுக்கு ப‌ரிந்துரை செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.

ஏ.ஆர்.ர‌ஹ்மானின் பெய‌ர் 3 பிரிவுக‌ளில் அதாவ‌து இந்த‌ப் ப‌ட‌த்திற்கு இசை அமைத்த‌த‌ற்காக‌வும் இர‌ண்டு பாட‌ல்க‌ளுக்காக‌வும் ப‌ரிந்துரை செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. இந்தியாவை சேர்ந்த‌ ஒருவ‌ர் 3 விருதுக‌ளுக்கு ப‌ரிந்துரை செய்ய‌ப்ப‌டுவ‌து இதுவே முத‌ல் முறை என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.

ஏ.ஆர்.ர‌ஹ்மானின் திரையுல‌க‌ வாழ்வின் ல‌ட்சிய‌மும் ந‌ம‌து எதிர்பார்ப்பும் வ‌ரும் பிப்ர‌வ‌ரி மாத‌ம் 22‍ம் தேதி ஆஸ்க‌ர் விருது அறிவிப்பில் தெரிந்துவிடும். இந்தியாவில் இதுவ‌ரை யாருக்கும் கிடைக்காத‌ பெருமை இந்த‌ ஆஸ்க‌ர் விருதைப் பெறுவ‌தின் மூல‌ம் ஏ.ஆர்.ர‌ஹ்மானுக்கு கிடைக்கும் என‌ ந‌ம்பிக்கையுட‌ன் காத்திருப்போம்.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>