இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கோல்டன் குளோப் விருது
பதிந்தவர் சூர்யா மேல் ஜனவரி 13, 2009
உலகப்புகழ் பெற்ற இசை அமைப்பாளரும் நம் தமிழகத்தின்
” இசைப்புயல்” என வர்ணிக்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு ஹாலிவுட்டின் உயரிய விருதாகக் கருதப்படும் “கோல்டன் குளோப்” விருது “ஸ்லம்டாக் மில்லியனர்” என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்ததற்காகக் கிடைத்துள்ளது.
இந்த விருதைப் பெற்றதன் மூலம் கோல்டன் குளோப் விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை ஏ.ஆர்.ரஹ்மான் பெறுகிறார். மேலும் இந்த விருது ஆஸ்கார் விருதுக்கான நுழைவாயிலாகவே கருதப்படுவதால் ஆஸ்கார் விருதிற்கான கலைஞர்கள் பட்டியலில் நமது ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரும் நேரடியாக இடம்பெரும் என்ற நம்பிக்கை இப்பொழுது பிரகாசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ், ஹிந்தி திரைப்படங்களுக்கு பல்வேறு தேசிய மற்றும் மாநில விருதுகளைப் பெற்றிருந்தாலும் இப்பொழுது உலக புகழ்பெற்ற கோல்டன் குளோப் விருதைப் பெற்று உலக அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் திறமையை எவ்வளவு பாராட்டினாலும் அது தகும்.
Anandan சொன்னார்
சந்தோசம் தான்…
ஆமா…. இந்த விருது எல்லாம் எப்படி கொடுப்பாங்க…. இதெல்லாம் தமிழ் படத்துல மீசிக் போட்டா கொடுக்க மாட்டாங்களா ராஜா….
நம்ம ‘இளையராஜா’ என்ன தப்பு பண்ணுனாரு.. தமிழனாப் பொறந்து தமிழ்-ல மியூசிக் போடரதத் திவிர… அவருக்கு golden universe ன்னு ஏதாவது விருது கொடுக்கணும் ராஜா…
Anandan சொன்னார்
நேத்து நம்ம கோவாலுவப் பார்த்தேன்… இதச் சொன்னதுக்கு ஒரு ‘செத்த சிரிப்பு’ சிரிச்சுட்டு கேட்டான்…
“அடப் போங்க சார்… மனுஷன் நிம்மதியாத் தூங்க முடில… எப்ப எவன் தலைல குண்டு போடுவான்னு இருக்கு… இதுல நம்ம ராஜா வேற, விருது எருது-ன்னுட்டு… சரி, சனிக்கிழம ரஹ்மான் பேருல ஒரு பார்ட்டி-யப் போடுவோம்… ” அப்படின்னு…
நீ என்ன ராஜா சொல்றே… ?
Sriram சொன்னார்
I am so proud that I am an INDIAN.
A few like Rahman made me to feel proud of it.
Ganeshuu சொன்னார்
ஏய்யா ஆனந்த், இன்னும் நீங்க திருந்தவே இல்லையா !!!! என்னடா காரணம் கெடைக்கும்னு யோசிப்பிங்களோ !!!!
போங்க போய் புள்ள குட்டிகள படிக்க வைக்கிற வழிய பாருங்க !!!!
சூர்யா சொன்னார்
நம்ம ஏ.ஆர்.ரஹ்மான் இளையராஜாவின் சிஷ்யர் என்ற வகையில் அவருக்கு பெருமை தான் ராஜ்..
இந்த விருதைப் பற்றி மேலும் தெரிய கீழே இருக்கும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
http://www.goldenglobes.org/
Mithun சொன்னார்
Rahman is the best music director, so he got golden globe now and he will get oscar soon.
Arunagiri சொன்னார்
‘Slumdog..’ bags 10 Oscar nominations
Los Angeles: British director Danny Boyle’s hit film “Slumdog Millionaire” has won 10 Oscar nominations, three of them for Indian musician maestro A.R. Rahman for his original score and two songs composed by him.
Anandan சொன்னார்
கிரி, slumdog millinaire ஐப் பத்தி படிச்சுப் பார்த்துட்டு அந்த படத்தைப் பார்த்தேன் ராஜா… நல்லாத தான் இருக்கு…
கொஞ்சம் intresting ஆத்தான் இருந்துச்சு… ஆனா, இன்னாத்துக்கு இதுக்கு மீசிக் அவ்வர்டு ன்னு தான் பிரில…
தப்பா நினைசுக்கதீங்கப்பா…. இந்த ஆஸ்கார், டச்கார், அம்பாசடர் கார் எல்லாம் எதுக்கு கொடுக்கறாங்கன்னு எனக்கும், கோவாலுவுக்கும் பிரியவே இல்ல..
கணேசு, in between, Manson House நல்லாவே இருந்துச்சு…
சூர்யா சொன்னார்
ஆமா… யாரப்பா அந்த கோவாலு… கூட்டிட்டு வா ராஜ்… ஒரு நாள்…